இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல பொறுப்புக்களிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, நேற்று மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கமைய, பாரத் அருள்சாமி, கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.