ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறுகையில், விசாரணைகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.
அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்றார்.