அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் குடும்ப தகராறு இடம்பெறுவதாக நொச்சியாகம பொலிஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற பொலிஸார் வீட்டுக்குள் ஒருவர் மயங்கிக் கிடந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர், வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய இந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், அவ்வாறான நேரங்களில் அயலவர்களையும் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது