கலால் திணைக்களத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய ஆணையாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பிரேரணை ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டது.
அண்மையில் ஒப்பந்த அடிப்படையில் கலால் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ஜே.எம்.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.
இலங்கை கலால் திணைக்களம் அரசாங்கத்தின் பிரதான வருமான சேகரிப்பு முகவர் என்பதுடன் இத்திணைக்களத்தின் வினைத்திறன் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் வருவாயை நேரடியாக பாதிக்கிறது.
புதிய ஆணையாளர் நாயகம் யு.டி.என் ஜயவீர உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அதிகாரி ஆவார். அவர் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக (ஏஜென்சி ஒருங்கிணைப்பு II) கடமையாற்றி வருகிறார்.