கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் 2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த ஜே.லியாக்கத் அலி காரைதீவு,சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும்,ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும்,கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.