கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.