டியூனிசியாவின் ஜனாதிபதியாக கயிஸ் சயித் தொடர்ந்து இரண்டாவது முறையாக தெரிவு

0

டியூனிசியாவின் ஜனாதிபதியாக கயிஸ் சயித் தொடர்ந்து இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

90 தசம் 7 வீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் வாக்காளர்களில் 30 வீதத்திற்கும் குறைவானவர்கள் வாக்களித்துள்ள நிலையிலே இவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2019ஆம் ஆண்டு முதல்  முறையாக ஆட்சிக்கு வந்த கயிஸ் சயித் அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்து அரசியல் சாசனத்தை சீர்திருத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.