திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘வாணி விழா’ கடந்த 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி அஞ்செல்லா அல்போன்சஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பினை கல்லூரியின் பணியாளர் செல்வி மேரி நதுஷா ஜெயக்குமார் மேற்கொண்டார்.நிகழ்வில்ஆரம்ப நிகழ்வாக சரஸ்வதி பூசையும் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் நடனங்கள் ,பாட்டு,ஒர்கன் இசை போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது நிகழ்வில் கலந்துகொண்ட திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.அவர் தமது உரையில்,வாணி விழாவின் முக்கியத்துவம்.இன,மத எல்லைகளைக் கடந்து மன்றம் ஆற்றி வருகின்ற பணிகள் பற்றி எடுத்துக்கூறியதுடன் ,அடுத்த வருடம் ‘வாணி விழா’ இன்னும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். நிறைவாக,நன்றியுரையை கல்லூரியின் பணியாளர் செல்வி மேரி ஜஸ்மிலா அமலதாஸ் வழங்கினார்.
இந் நிகழ்வில் மன்ற அங்கத்தவர்கள்,கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் .
இவ்விழாவிற்கான அனுசரணை திரு.திருமதி ரோடி ஜொய்ஸ்- லண்டன் அவர்கள் வழங்கினார்கள்.