இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) புதிய தலைவராக மூத்த பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்பு 2012 முதல் 2013 வரை SEC இன் பணிப்பாளர் நாயகமாகவும், 2008 முதல் 2012 வரை நிதிச் சேவைகள் அகடமி மற்றும் மூலதனச் சந்தை கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
திசபண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதித்துறை, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தில் நிதி மற்றும் நிறுவன ஆளுகைக்கான சிரேஷ்ட பேராசிரியராக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.