இன்று அதிகாலை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை – யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்