முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட, பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததாவது, எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, விரைவில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்குத் தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.