தமிழரசு கட்சியிலிருந்து விலகுகின்றார் மாணிக்கம் உதயகுமார்.

0

மாணிக்கம் உதயகுமார், தமிழரசு கட்சியின் உறுப்புரிமையிலும், வட்டாரத் தலைமை பதவியிலுமிருந்தும் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியினால் தான் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டமையினாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

இவர், 2020ஆம் ஆண்டு அப்போது வகித்த மட்டக்களப்பு அரச அதிபர் பதவியை தூக்கியெறிந்து தமிழரசுக் கட்சியின் முழுநேர அங்கத்துவராக செயற்பட்டவர் ஆவார்.

              

அத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர் 21,999 விருப்பு வாக்குகளை பெற்றார்.
எனினும், இன்று இதனை ஒருசிலர் தமது தனிப்பட்ட வெற்றியாகக் கருதி தன்னிச்சையாக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.