ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு

0

பதுளை மாவட்டத்திலுள்ள ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்திய-இலங்கை கூட்டு திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக இன்று (09ஆம் திகதி ) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த புகையிரத சேவை பதுளை வரை பயணிக்காது.

அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் புகையிரதங்கள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும்

Leave A Reply

Your email address will not be published.