தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி குறித்து விளக்கம் கோரப்படும்

0

தாமரை கோபுரத்தில் இருந்து  மாணவி குதித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த கொழும்பு சர்வதேச பாடசாலையில் விளக்கம் பெற கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தரே தெரிவித்துள்ளார். இதில் மூன்று மேலதிக செயலாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்கள் இச் சம்பவம் குறித்து விளக்கம் பெறுமாறு பணித்துள்ளதாக டெய்லி மிரருக்கு அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவித்தார்.

எனினும் நாட்டில் இயங்கும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் மீது கல்வி அமைச்சிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை, ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து அறிக்கை கேட்கப்படும் என்று அவர் கூறினார்.

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். இது தற்கொலை என பொலிசார் உறுதி செய்தனர். முன்னதாக, அவரது தோழிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் அங்கீகாரம் வழங்கவும் அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை திருமதி ஜே.எம்.திலகா ஜெயசுந்தரே வலியுறுத்தினார்.

தற்போது, கல்வி அமைச்சகத்திடம் இந்தப் பாடசாலைகள் பற்றிய தரவுத்தளம் இல்லை என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.