வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை ஐக்கிய மக்கள் கூட்டணி இன்று தாக்கல் செய்தது.
Related Posts
எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியி டுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
வன்னிமாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன், உனைஸ்பாரூக் மற்றும் ரசிக்கா, சாந்தி குமார் நிரோஸ்கும்ர் உட்பட ஏனைய ஐவர் வேட்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.