தேசிய மக்கள் சக்தி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது!

0
வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தேசியமக்கள் சக்தி இன்று தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசியமக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்றுகாலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.
முன்னதாக இரட்டை பெரியகுளம் பகுதியில்இருந்து வாகனங்களில் ஊர்வலமாக வருகைதந்த கட்சியின் ஆதரவாளர்கள் அதன்பின்னர் வேட்புமனுவினை தாக்கல்செய்தனர்.
வன்னிமாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியானது உபாலிசமரசிங்க, செல்வத்தம்பி திலகநாதன்,மயில்வாகனம் ஜெகதீஷ்வரன்,பாத்திமா அயிஸ்த்தா,பிரேமரத்தின,ஜோகராஜா சிவரூபன்,அன்டன் கலை,அபுபாகீர் பிரைஸ்தீன்,இராதாகிருஸ்ணன், ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுளனர்.
Leave A Reply

Your email address will not be published.