வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தாக்கல்செய்தார்.
எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு
சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்றுகாலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.