வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம்- பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு.

0

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்றயதினம் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் சாவடைந்தார்.

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில்  காணி தொடர்பான முரன்பாடு நேற்றயதினம் வாள்வெட்டில் முடிந்தது.

குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்தார்.

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.