எத்துல் கோட்டே வீட்டுத் தொகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு பெண்கள் உட்பட 15 சீன பிரஜைகள் நேற்று (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.