ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் – திகாம்பரம்

0

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மக்களுக்கு பத்து பேர்ச் கானியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் தாம் ஆதரவினை வழங்க தயாராக உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டப்பகுயில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (13)  கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்: நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தற்போதைய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வருமை நிலையில் இருந்து வந்த ஒருநபர் மலையக மக்களுக்கு வீட்டுரிமை மலையக இளைஞர் யுவதிகள் அதிகமாக கொழும்பு பகுதியில் உள்ள வீடுகளுகளிலும் உணவகங்களிலும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டதாக எதிர்கட்சியில் இருந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் அதிகமாக குரல் கொடுத்தார்.

பொது தேர்தல் என்பது மலையக மக்களுக்கு முக்கியமான ஒரு தேர்தலாகும் ஏன் எனில் மலையக பிரதிநிதிகளை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருகிறது மலையகத்தில் புதிய மாற்றம் வேண்டும் என  சுயட்ச்சையாக சிலர்போட்டியிடுகின்றனர் சிலர் கூறுகின்றனர் மலையக மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கவில்லை என கூறுகின்றனர்

மலையத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைவடைந்தால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்ப முடியாது மலையக மக்களின் சம்பள பிரச்சினை முதல் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கு போராட கூடிய ஒரு கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணி மாத்திரமே உள்ளது

மலையகத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் மாத்திரமே, ஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எமது மூவரின் வெற்றி உருதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.