அக்டோபர் 15 ஆம் திகதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன்படி அணியின் முன்னாள் தலைவர் பாபர் அசாம், சாஹீன், நசீம், சர்பராஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்ந்துக் கொள்ளப்படவில்லை.
குறித்த வீரர்களின் தற்போதைய நிலை மற்றும் உடற்தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், 2024-25 சர்வதேச கிரிக்கெட் பருவத்தில் பாகிஸ்தானின் எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டும், பாபர் அசாம், சாஹீன், நசீம் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
எனினும் சர்பராஸ் அகமது டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளமையால், அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை பதிலாக சான் மசூத் தலைமையில் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.