ஷானியின் நியமனத்திற்கு கடும் எதிர்பு!

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பணியகத்தின் பணிப்பாளராக நியமித்தமை தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனம் (IRES) கேள்வி எழுப்பியுள்ளது.

அபேசேகரவின் நியமனம் குறித்து அரசாங்கம் ஒக்டோபர் 10ஆம் திகதி  அறிவித்தமை குறித்து IRES இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க,   கேள்வி எழுப்பினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்காக (NPP) தீவிரமாக பிரச்சாரம் செய்த ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுவில் அபேசேகர இணைந்திருந்ததாக கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அபேசேகரநியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அபேசேகர சேவையில் இருக்கும் போது திறமையான அதிகாரியாக கருதப்பட்டாலும், பொதுத் தேர்தல் முடிந்து புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் பின்னரே அவரது நியமனம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.