அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு குமுதுனி நியமனம்: அமைச்சரவை அனுமதி

0

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பதவிக்கு சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளராக பணியாற்றிய தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்ற நிலையில், புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அரச மேலதிக பரீட்சார்த்தியாக கடமையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அதிகாரியான சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில், பிரதமரால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.