ஆபாச வீடியோ குறித்த ஓவியாவின் பதில்!

0

17 வினாடிகள் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா என சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நிலையில் கேரள சைபர் கிரைம் பொலிஸில் நடிகை ஓவியா புகார் அளித்துள்ளார்.

நடிகைகளும் பெண்கள்தானே, அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்கிற அக்கறை ஏதும் இல்லாமல் அற்ப சந்தோஷத்திற்காக கணினியில் ஒட்டிங் கட்டிங் என செய்து டிரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளின் முகத்தை சேர்த்து வைத்து இணையத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த காட்சிகளை பார்க்க பல ஈக்கள் இணையத்தை மொய்த்து வருகின்றன. இது போன்ற விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகைகள் கொந்தளிப்பார்கள். இல்லாவிட்டால் அது நானில்லை என விளக்குவார்கள். என்னதான் இவர்கள் விளக்கினாலும் அவர்கள் வதந்தியை பரப்பித்தான் வருவார்கள்.

அந்த வகையில் 17 வினாடிகள் நீளம் கொண்ட ஒரு ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இருக்கும் ஆணின் முகம் தெரியவில்லை. ஆனால் அதிலிருக்கும் ஒரு பெண் தெளிவாக யாரென தெரியாவிட்டாலும் அவர் கையில் இருக்கும் டாட்டூவை பார்த்து இது நடிகை ஓவியா என ஒரு கும்பல் அவதூறு பரப்பியுள்ளது.

இதை நம்பி பலர் நடிகை ஓவியாவின் வீடியோ என்றே இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகிறார்கள். அது ஒரு மோசமான வீடியோ என்ற போதிலும் யாரென்றே தெரியாமல் சம்பந்தப்படுத்துவதே தவறு, இதில் ஏதோ டாட்டூவை வைத்து இன்னார்தான் என கூறுவது என்ன விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேல் எந்த வித சங்கோஜமும் இல்லாமல் இந்த வீடியோ குறித்து ஓவியாவிடமே சில நெட்டிசன்கள் தங்கள் கல் மனதை கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு ஓவியா அழுது ஆர்ப்பாட்டம் செய்தோ, இல்லை என மறுப்பதோ இல்லாமல் தக் லைஃப் பதிலை கொடுத்துள்ளார்.

அதில் ஒருவர் “வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல” என்கிறார். அதற்கு ஓவியா, அலட்டிக் கொள்ளாமல் , என்ஜாய் என பதில் கொடுத்துள்ளார். அதுபோல் இன்னொருவர், “இன்னும் லென்த்தா வீடியோ எடுத்திருக்கலாம்” என்கிறார். அதற்கு ஓவியா, நெக்ஸ்ட் டைம் ப்ரோ” என கூலாக பதில் சொல்கிறார்.

ஆனால் இதே வேலையாக பலர் ஓவியாவை நக்கலடித்த போது அவர் கேரள சைபர் கிரைம் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். ஒரு ட்வீட்டில் அந்த வீடியோவில் இருப்பது நானில்லை, எனவே அந்த வீடியோவை தவிர்த்துவிடுங்கள் என தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.