பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.