சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று இருபதுக்கிருபது கிரிக்கட் போட்டிகளும் மூன்று ஒரு நாள் ஒரு நாள் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மூன்று இருபதுக்கிருபது கிரிக்கட் போட்டிகளும் தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் மூன்று ஒரு நாள் போட்டிகளும் பல்லேகல்ல மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
இதில் முதலாவது இருபதுக்கிருபது போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டாவது போட்டியில் இலங்கை அணி படுதோல்வி ஆடிய செய்தது. நேற்றைய மூன்றாவது இருபதுக்கிருபது போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தீக்ஷிணவின் ஓவர்களில் தமது விக்கட்டுகளை இழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இருபது ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. அதிக பட்சமாக ரோவன் போவெல் 37 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிசங்க மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்த போதிலும் பத்தும் நிசங்க 39 ஓட்டங்களை பெற்றவேளையில் மொட்டீயின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த குஷால் பெரேரா நிலைத்துநின்று ஆட இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது. காலத்தில் குஷால் பெரேரா 55 ஓட்டங்களுடனும் குஷால் மெண்டிஸ் 68 ஓட்டங்களுடனும் நின்றனர். ஆட்ட நாயகனாக குஷால் மெண்டீசும் தொடர் நாயகனாக பத்தும் நிசங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.