முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு ப்ளஸ் வன் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட மக்கள் பணத்தை முடிந்தால் தேடிக்கொள்ளுமாறு அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.