மோசமான நிலையில் சங்குப்பிட்டி – கேரதீவுப்பாலம்

0

சங்குப்பிட்டி பாலம் உட்பட நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் காணப்படுவதாக முன்னாள் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் பற்றாக்குறையான வருமானத்திலேயே இவற்றுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில்தான் பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகிறது. அவற்றை உடனடியாக மேற்கொள்வதற்கு பணம் எங்கே உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறாக இன்று (18) சங்குப்பிட்டி பாலத்தினால் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் பயணிகளை பாலத்தில் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.