வவுனியா விளையாட்டுக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு (வீடியோ)

0
வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டிட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டிட தொகுதியானது நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன.
இதன் பிரகாரம் குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் சுமார் 14 கோடி ரூபா ஒதுக்கப்பப்டு முழுமையாக சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் பேராசிரியர் ரியல் அட்மிரல் செமால் பெர்னான்டோ, உதவி பணிப்பாளர் கே. டபிள்யு. டி. கே.
 கொஸ்தா மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ். சரத் சந்திர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத் தொகுதியை திறந்து வைத்திருந்தனர்.
Leave A Reply

Your email address will not be published.