இந்தியாவில் விமானப் பயணங்கள் மற்றும் விமான பயணிகளை அதிகம் அவதிக்குள்ளாக்கியிருக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகும் நிலையில் இன்று சனிக்கிழமை மட்டும் 20, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Air India, IndiGo, Akasa Air, Vistara, SpiceJet, Star Air, and Alliance Air விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐந்து சர்வதேச விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கொழும்பு வந்த விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர நிலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக கடந்த திங்கள்கிழமை முதல், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களால் 35 க்கு மேற்பட்ட விமானங்கள் அவரசமாக தரையிறக்கப்படுவது, தாமதமாகப் புறப்படுவது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகவும் இதனைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.