உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்ப்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டப்போது சிகிச்சையின் பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகிவருவதாக உறுதிப்படுத்தப்பட்டது.