வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதேபாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் இன்றையதினம் வீடு சென்றிருந்தார்.
Related Posts
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்கியதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் இன்றையதினம் இரவுவரை கைதுசெய்யப்படவில்லை என மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.