மேற்கிந்திய தீவுகள் அணியை சாய்த்தது இலங்கை

0

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலானான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று பல்லேகல்ல மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினாலும் பின்வரிசை வீரர்களின் நிதானமான துடுப்பாட்டத்தினால் 38 .3 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 185 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டக் வேர்த்து லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 31,5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது. ஆட்டநாயகனாக சரித் அசலாங்க தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.