சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16 ம் பெங்களூரு மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழட்சியில் வென்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானித்தது. ஆரம்பம் முதலே தடுமாறிய இந்தியா அணி 46 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி 5 விக்கட்டுகளையும் வில்லியம் ஓ ருவார்க் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 402 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்தியா அணி சார்பில் குலதீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்தநிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 462 ஓட்டங்களை பெற்றநிலையில், நியூஸிலாந்துக்கு 107 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த 462 ஓட்டங்களில் சர்பராஸ்கானின் கன்னி சதத்துடன் கூடிய 150 ஓட்டங்களும் அடங்கியிருந்தன.
இந்த இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 110 ஓட்;டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதன் மூலம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரில், நியூஸிலாந்து ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மகாராஸ்டிர மாநிலம் பூனேயில் ஒக்டோபர் 24ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.