எண் கணிதத்தின்படி 6,15,24 ஆகிய திகதிகளின் கீழ் பிறந்தவர்கள் 6ஆம் எண்ணின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்கள்.
இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இயல், இசை, நாடகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
தன்னுடைய பொருட்களை எந்தவொரு சுயநலமும் இல்லாமல் பிறருக்கு விட்டுக்கொடுப்பார்கள்.
பொதுவான குணங்கள்
அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். தன்னம்பிக்கையும் அசட்டுத் தைரியமும் இவர்களிடம் சற்று அதிகமாகவே காணப்படும்.
பரிகாசமாகப் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். கஷ்டப்பட்டு உழைக்க விரும்ப மாட்டார்கள்.
பிடிவாத குணம் சற்று அதிகம். பிறருக்கு அடிமையாக இருந்து வேலை பார்ப்பது இவர்களுக்கு சிறிதும் பிடிக்காது.
மற்றவர்கள் மனதை புண்படுத்தும்படியான பேச்சுக்கள் இவர்களிடம் அதிகம் உண்டு. கோபம் ஏற்பட்டால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
திகதி வாரியாக.
6ஆம் திகதி – எப்போதும் செல்வத்துடன் இருக்கவேண்டும் என்பதால் கடுமையாக உழைப்பார்கள். அடக்க சுபாவமும் ஆழ்ந்த சிந்தனையும் உண்டு.
15ஆம் திகதி – பேச்சுத்திறமையும் கவர்ச்சியும் இவர்களிடம் உண்டு. எதிரியை எடை போடக்கூடியவர்கள். நல்ல புகழும் அதிர்ஷ்டமும் இவர்களைத் தேடி வரும்.
24ஆம் திகதி – துணிச்சலானவர்கள். அடக்கமும் அமைதியும் அழுத்தமும் நிறைந்தவர்கள்.
திருமணம்
காதல், இன்பம் என்று இரண்டும் கலந்த ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். இவர்களது வாழ்க்கைத் துணை மிகவும் அழகாகவும் இவர்களது விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
தொழில்
சினிமா, நாடகம், இசை ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள், சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான வேலைகள், நகை விற்பனை, நீதிபதிகள், கண்ணாடி, வாசனைப் பொருட்கள் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.
அதிர்ஷ்ட எண்கள் – 6,15,24,9,18,27 ஆகிய திகதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். 3,12,21 ஆகிய தினங்கள் துரதிர்ஷ்டமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் – பச்சை, நீலம், இளம் சிவப்பு ஆகியவை இவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறங்களாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.