மஹிந்த இப்படித்தான் பணத்தை சுரண்டினார்: பகிரங்கப்படுத்திய அனுர!

0

2005 ஆம் ஆண்டு தேர்தலில் இறுதி சுவரொட்டியை அச்சிடுவதற்கு கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பணம் இல்லை, ஜனதா விமுக்தி பெரமுனவே (ஜே.வி.பி) அவரின் இறுதிச் சுவரொட்டியை கடன் அடிப்படையில் அச்சிட்டதாகவும் அவ்வாறிருக்கையில் அவர்கள் இப்போது பெரும் செல்வத்தை எப்படி குவித்துள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

தம்புத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பசில் ராஜபக்ஷ இதுவரையில் அந்த பணத்தை செட்டில் செய்யவில்லை என்று கூறினார்.

உலகம் முழுவதும் வீடுகளை வாங்குவதற்கும், நாடு முழுவதும் காணிகளை கொள்வனவு செய்வதற்கும், கொழும்பில் மாளிகைகளை கட்டுவதற்கும் அவர்கள் எவ்வாறு பாரிய சொத்துக்களை குவித்துள்ளனர் என திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

அரசியல்வாதிகள் மக்களை அடக்கி சொத்துக்களை குவிக்கிறார்கள் என்று கூறிய அவர், இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு NPP முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறினார்.

ஜே.வி.பி.யினரோ அல்லது என்.பி.பி.யினரோ பொதுப் பணத்தை ஒரு சதத்தை கூட தவறாக பயன்படுத்தவில்லை அல்லது அரசியல் மூலம் பணம் அல்லது செல்வத்தை சம்பாதிக்கவில்லை என்று திஸாநாயக்க கூறினார்.

“அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து சலுகைகளையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளோம்.அரசியல்வாதிகளை பராமரிக்க பொது பணம் செலவழிக்க கூடாது.பொது பணத்தை செலவிட்டு அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதி, வீடு, மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த மாட்டோம்.பாதுகாப்பு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் மட்டுமே வழங்கப்படும்,” எனவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.