வவுனியா – ஓமந்தையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(10.09.2024) இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை பயணித்த தொடருந்தானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது தொடருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது தொடருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.