ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய தேசிய இனம் என்பதனை வெளிகாட்டி, நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, 2009ஆம் ஆண்டு மிகப்பெரும் இன அழிப்பொன்றின் ஊடாக அழித்த பேரினவாத அரசு, தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது.