இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போர் இடம்பெற்று வரும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.