லெபனானில் வான்வழித் தாக்குதல்: 33 பேர் பலி, 195 பேர் காயம்

0

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 195 பேர் காயமடைந்தனர்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன், லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 195 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் எப்போது நிறுத்தப்படும் என தெரியாமல் பக்கத்து நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. மேலும், பெய்ரூட்டில் நடந்து வரும் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது என ஐ.நா., வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.