2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது.
இந்த திட்டமானது இன்று (02), மதியம் 12 மணிக்கு தொடக்கம் நவம்பர் 5, வரை ஒன்லைன் பதிவுக்காக திறந்திருக்கவுள்ளது.
ஆண்டுதோறும் 55,000 நபர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இந்த விசா வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்காக http://dvprogram.state.gov என்ற இணையத்தளத்திற்குள் நுழைய முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.