மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கட்டாருக்கு மேற்கொண்டுள்ள விஜயமானது பேசுபொருளாகியுள்ளது.
இஸ்ரேல் மீது நேற்று இரவு 400க்கும் அதிகமான ஏவுகணைகளை கொண்டு ஈரான் பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கட்டாருக்கு முன்னர் திட்டமிடப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.