இலங்கைக்கு எதிரான 3 சர்வதேச T20 போட்டிகளும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கெடுக்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வெகு விரைவில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள உள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி தொடங்கவுள்ள T20 போட்டிகள் தம்புள்ள மைதானத்திலும் 20ம் திகதி தொடங்கவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள் பல்லேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இலங்கை அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டமை அனைவரது பாராட்டையும் பெற்றது … அதன் பின் நியூசிலாந்தில் நடைபெறும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . குறிப்பாக ஜெயசூர்யாவின் பயிற்றுவிட்ப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.