இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்று முன்னர் 10.30 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை இந்திய கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபின்னர் முதல் விஜயமாக புதுடில்லி செல்லவுள்ளார்.