ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (04) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (04) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. (PMD)
குறித்த கலந்துரையாடவானது இரண்டாவது நாளாகவும் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.