Mஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39,698 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 9,928 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேநேரம், டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் பலியாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.