மகளிர் உலகக்கிண்ண போட்டியில் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

0

மகளிர் அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று முக்கிய போட்டியாக இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி என்றால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாகவும் சுவாரஷ்யமான விறுவிறுப்பான போட்டியாகவும் அமைவது வழக்கம்.

அந்த வகையில் இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் பாக்கிஸ்தான் இலங்கை அணிக்கெதிராக விளையாடிய போட்டியில் வெற்றியையும் இந்தியா அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியையும் தழுவிக்கொண்டுள்ளது. எனவே புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் பாக்கிஸ்தான் அணி தொடர்ந்து முன்னிலையில் நீடிக்குமா அல்லது இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா புள்ளிகளை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாவது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.