இலங்கையில் கடவுச்சீட்டு நடைமுறையில் வெகுவிரைவில் மாற்றம்

0

இலங்கை குடிவரவு அலுவலகத்தில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, புதிய சப்ளையர் ஒருவரிடமிருந்து N-series machine-readable கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் சண்டே ரைம்ஸிடம் தெரிவித்தார்.

விநியோகஸ்தர், Thales DIS Finland Oy, நிறுவனத்திடமிருந்து 47,500 கடவுச்சீட்டுக்களின் முதல் தொகுதி ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கும் 20 இற்கும் இடையில் கிடைக்கும். நவம்பர் இறுதிக்குள் 100,000 கடவுச்சீட்டுக்களின் இரண்டாவது தொகுதியை வழங்க உள்ளது.

தற்போதைய கடவுச்சீட்டு இருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டின் மாதிரிகளை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தேல்ஸ் நிறுவனம் இன்னும் வழங்கவில்லை.

எந்தவொரு புதிய கடவுச்சீட்டையும் நடைமுறைப்படுத்த முதல் உலகெங்கிலும் உள்ள எல்லை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இந்த கடவுச்சீட்டின் நகல்களை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு International Civil Aviation Organisation (ICAO) முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.