சர்வதேச மகளிர் கிரிக்கட் அணிக்கான இருபதுக்கிருப்பது உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சர்வதேச மகளிர் கிரிக்கட் அணிக்கான இருபதுக்கிருப்பது உலக கிண்ண கிரிக்கட் போட்டி துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் நடந்து வருகின்றது …. இன்றைய போட்டியில் இந்திய அணியை எதிர்த்து பாக்கிஸ்தான் அணி மோதியது. இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பாக்கிஸ்தான் அணி சார்பாக அதிக பட்சமாக Nida Dar என்பவர் 28 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணி சார்பாக அருந்ததி ரெட்டி என்பவை 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது ஆரம்ப விக்கட்டினை 4ஆவது ஓவரில் இழந்தது. நம்பிக்கை நட்சத்திர மந்தனா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார் ..
தொடர்ந்து சுதாகரித்து கொண்ட இந்திய அணி 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட் இழப்பிட்கு 50 ஓட்டங்களை பெற்றது. என்றாலும் தொடர்ந்து 11 ஆவது ஓவர் நிறைவில் இந்திய அணி 61 ஓட்டங்களை எடுத்திருந்த வேளை உமைமா சொஹைல் வீசிய பந்தில் அலியா ரியாஸ் என்பவரிடம் பிடிகொடுத்து 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் இன்னுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான Shafali Verma என்பவர்.
அதனை தொடர்ந்து இந்திய அணி 30 பந்துகளில் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தேவையாக இருக்கையில் பாக்கிஸ்தான் அணி சார்பில் பந்து வீச அழைக்கப்பட்ட ஆரம்ப பந்து வீச்சாளரான பாத்திமா சனா அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றி இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார். எனினும் இறுதியில் இந்திய அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 18.5 ஓவர்களில் 108 ஓட்டங்களை எடுத்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து உள்ளன.