பங்களாதேஷ் அணியை பதம் பார்த்தது இந்தியா
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கிருபது போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி இன்று பங்களாதேஷுக்கெதிரான தனது முதலாவது இருபதுக்கிருபது போட்டியில் விளையாடியது.
முதலில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது. இதில் பங்களாதேஷ் அணி சார்பாக அதிக பட்சமாக மெஹிடி ஹசன் 35 ஓட்டங்களை பெற்றார். இந்தியா அணி சார்பில் அர்ஷிதீப் சிங் 3.5 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
128 என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் 2 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தம் 29 ஓட்டங்களையும் ஹர்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தம் 39 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பங்களாதேஷ் அணிசார்பில் முஸ்தபிஸுர் ரஹ்மான், மெஹிட்ய் ஹசன் மிராஸ் தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றினர். ஆட்டநாயகனாக அர்ஷிதீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.